
சித்தார்த் தயாரித்து நடித்துள்ள படம் அவள். இந்த படம் தமிழில் ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்ற நிலையில், தெலுங்கில் நவம்பர் 17-ந்தேதிதான் கிருஹம் என்ற பெயரில் வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவில் சித்தார்த்திற்கென்று ஒரு மார்க்கெட் இருந்தபோதும், படத்தை பெரிய அளவில் வெற்றி பெறச்செய்து விட வேண்டும் என்பதற்காக, அந்த படத்தில் ஆண்ட்ரியாவுடன் அவர் நடித்துள்ள உதட்டு முத்தக்காட்சிகளை முன்னிறுத்தி சில வாரங்களாக பப்ளிசிட்டி செய்த பிறகு படத்தை வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில், கார்த்தி-ரகுல்பிரீத்சிங் நடித்துள்ள தீரன் அதிகாரம் ஒன்று படமும் காக்கி என்ற பெயரில் நவம்பர் 17-ந்தேதி தெலுங்கில் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த வகையில், இதுவரை தமிழில் நேரடியாக மோதிக்கொள்ளாத சித்தார்த், கார்த்தி ஆகிய இருவரும் தெலுங்கு சினிமாவில் முதன்முறையாக நேரடியாக மோதிக் கொண்டுள்ளார்கள்.
Post a Comment