பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் அவரது காதலரான அலெக்ஸிஸ் ஒஹானியனைத் திருமணம் செய்து கொண்டார்.கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் செரீனா, அமெரிக்காவின் பிரபல சமூக ஊடக நிறுவனமான ரெட்டிட் நிறுவனத்தின் துணை நிறுவனரான அலெக்சிஸ் ஒஹானியனுடன் தனக்கு நிச்சயம் செய்யப்பட்டதாக அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, சேர்ந்து வாழ்ந்துவந்த இவர்களுக்கு கடந்த செப்டம்பர் 1-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது.
இதனைத் தொடர்ந்து இவர்களது திருமணம் வெள்ளிக்கிழமை நியூ ஓர்லன்ஸில் நடைபெற்றது.
இத்திருமணத்தில் செரினா மற்றும் அலெக்ஸின் நெருங்கிய உறவுகள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.
டென்னிஸ் உலகில் முடிசூடா ராணியாக விளங்கும் செரீனா வில்லியம்ஸின் திருமணத்துக்கு பிரபலங்கள் பலர் சமூக ஊடகங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Post a Comment