Ads (728x90)

ராணுவத்தால் வீட்டுச் சிறைக் காவலில் வைக்கப்பட்ட ஜிம்பாப்வே அதிபர் முகாபே முதல் முறையாக பொது நிகழ்வு ஒன்றில் பங்கேற்றுள்ளார்.

ஜிம்பாப்வேக்கு 1980-ல் சுதந்திரம் கிடைத்தது முதல் 30 ஆண்டுகளுக்கு மேலாக அந்நாட்டை ராபர்ட் முகாபே (93) தொடர்ந்து ஆட்சி செய்து வருகிறார். இந்நிலையில், துணை அதிபர் எம்மர்சன் நங்கக்வா அடுத்த அதிபராவதற்கான வாய்ப்பு இருந்தது. ஆனால் தனது மனைவி கிரேஸை (52) அடுத்த அதிபராக்கும் நோக்கத்தில் எம்மர்சனை முகாபே பதவி நீக்கம் செய்தார். இதற்கு ராணுவ தளபதி கான்ஸ்டன்டினோ சிவெங்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அந்நாட்டு ராணுவம் தலைநகர் ஹராரேவை புதன்கிழமை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. குறிப்பாக அரசு அலுவலகங்கள், அரசு தொலைக்காட்சி ஆகியவை ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. முகாபே ஹராரேவில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

தொடர்ந்து ராணுவத் தரப்பிலும், அதிபர் முகாபே தரப்பில் பேச்சுவார்த்தை நடந்துவந்தது.

இந்த நிலையில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட அதிபர் முகாபே மாணவர்களுக்கு படட்மளிக்கும் பொது நிகழ்வு ஒன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) கலந்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து ஜிம்பாப்வே ராணுவத் தரப்பில் கூறும்போது, ''அதிபர் முகாபேவுடன் பேச்சு வார்த்தை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது. விரைவில் முடிவு எட்டப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget