
சபையின் வடபிராந்திய முகாமையாளர் உபாலி கிரிவத்துட்டுவ மற்றும் பிராந்திய பாதுகாப்பு அலுவலர் வி.சுரேந்தர் ஆகியோரை உடனடியாக இடமாற்றக்கோரி போக்குவரத்துச் சபையின் வடபிராந்தியத் தொழிற்சங்கம் நேற்று பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தை அறிவித்தது.
அது இன்றும் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘‘தொழிற்சங்கத்தினுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில் இன்றும் வடக்கு முழுவதும் இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பேருந்துகள் சேவையில் ஈடுபடாது’’ என வாமதேவன் தெரிவித்தார்.
‘‘தொழிற்சங்கத்தினரால் முன்னெடுக்கப்படும் இந்தப் போராட்டத்தை டிசெம்பர் 13ஆம் திகதியே நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் அந்தக் காலப்பகுதியில் ஜி.சி.ஈ. சாதாரண தரப்பரீட்சை இடம்பெறவுள்ளது.
மாணவர்களின் நலன்கருதியே நேற்று பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டது. அது இன்றும் தொடர்கிறது’’ என்று அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment