எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் இந்த புதிய கட்டண திருத்தங் கள் அமுலுக்கு வருவதாகவும், அதில் தபால் செலவும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பொலிஸ் அனுமதி அறிக்கைக்காக விண்ணப்பிப் போர், இலங்கையிலிருந்து விண்ணப்பித்து இலங்கை முகவரிக்கு அவ்வறிக்கையைப் பெற்றுக்கொள்ள 1000 ரூபாவும், இலங்கை யிலிருந்து விண்ணப்பித்து வெளிநாட்டு முகவரி ஒன்றுக்கு அந்த அறிக்கையை தபால் ஊடாக பெற்றுக்கொள்ள 1500 ரூபாவும், இலங்கையிலிருந்தோ அல்லது வெளிநாட்டிலிருந்தோ இணை யம் ஊடாக அவ்வறிக்கையைப் பெற்றுக்கொள்ள 1500 ரூபாவும் அறவிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment