Ads (728x90)

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜய­சிங்­க­வுக்கு எதி­ராக மற்­று­மொரு குற்­றச்­சாட்டின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யும் வகையில் குற்­றச்­சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

ஏற்­க­னவே வித்­தியா கொலை வழக்கின் குற்­றவாளி­யான சுவிஸ் குமாரை தப்பிச் செல்ல உத­வி­யமை, கடந்த ஜனாதிபதி தேர்­தலின் போது பொது எதி­ர ணியினரின் தேர்தல் பிர­சார மேடை மீது துப்­பாக்கிச் சூடு நடத்தி ஐக்கிய தேசியக் கட்சியின் ஆத­ரவா­ளரைக் கொலை செய்­தமைக்காக முன்னாள் பிர­தி­ய­மைச்சர் பிரே­மலால் ஜய­சே­க­ர­வுக்கு ஆத­ர­வாக செயற்­பட்­டமை போன்ற குற்றச்சாட்டுக்களில் கைதாகி பிணையில் உள்ள நிலை­யி­லேயே அவ­ருக்கு எதி­ராக மற்­றொரு குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்பட்­டுள்­ளது.

காவத்தை பொலிஸ் பிரிவில் இடம்­பெற்ற வாகன விபத்து சம்பவத்தில் பொலிஸாருக்கு அழுத்தம் கொடுத்­தமை தொடர்பில் இந்தக் குற்­றச்­சாட்டு எழுந்­துள்­ளது.

இந்நிலையில் அது தொடர்பில் பொலிஸ் தலை­மை­யகம் ஊடாக விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்பட்­டுள்ளன. விரைவில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க கைது செய்யப்படலாம் எனவும் தெரிவிக்கப் படுகிறது.

Post a Comment

Recent News

Recent Posts Widget