மெடிற்றரேனியன் கடலில் இலங்கை உட்பட பல நாடுகளைச் சேர்ந்த 764 ஏதிலிகளுடன் படகு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. 23 பேரின் சடலங்களும் இருந்ததாக இத்தாலியக் கடலோரப் பொலிஸ் பேச்சாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.மத்திய மெடிற்றரேனியன் கடலில் நேற்றுமுன்தினம் அதிகாலையில் இந்தக் கடினமான மீட்புப்பணி இடம்பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.
ஆறு மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், 764 குடியேற்றவாசிகள் பாதுகாப்பாக கப்பலில் இருந்து மீட்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இத்தாலியை நோக்கிச் சென்று கொண்டிருந்த 764 குடியேற்றவாசிகள் இத்தாலியக் கடலோரப் பொலிஸாரால் மீட்கப்பட்டு, டிசியோற்றி என்ற கப்பலின் மூலம், தென்பகுதித் துறைமுகமான ரெக்கியோ கலாப்ரியாவுக்குக் கொண்டு செல்லப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கப்பலில் 8 பேரின் சடலங்களும் கொண்டு செல்லப்படுவதாகக் கூறப்படு கிறது.படகில் இருந்து மீட்கப்பட்ட குடியேற்ற வாசிகள், இலங்கை, சகாரா, பாகிஸ்தான், சிரியா, ஜோர்தான், ஏமன், மொராக்கோ, நேபாளம், அல்ஜீரியா, எகிப்து, பங்களாதேஷ், லெபனான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் இத்தாலியக் கடலோரப் பொலிஸ் பேச்சாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.
Post a Comment