Ads (728x90)

தமிழ் சினிமாவையும் அரசியலையும் பிரிக்க முடியாது என்பது எதிர்காலத்திலும் தொடரும் என்றே தோன்றுகிறது. அடுத்ததாக அரசியல் கட்சியை ரஜினிகாந்த் ஆரம்பிப்பார் என பலரும் சொல்லிக் கொண்டிருந்த நிலையில், “எனது அரசியல் கட்சி தற்போது கர்ப்பமாக இருக்கிறது, குழந்தை பிறந்த பிறகு பெயர் வைக்கிறேன்,” என கமல்ஹாசன் நேற்று அவருடைய பிறந்த நாளில் அறிவித்தேவிட்டார்.

கடந்த மே மாதம் திடீரென தன்னுடைய ரசிகர்களை சந்தித்தார் ரஜினிகாந்த். வழக்கம் போலவே அப்போதும் எதிர்காலத்தில் அரசியலுக்கு வரலாம், அது கடவுளின் விருப்பமாக இருந்தால் என்று கூறினார். அடுத்து செப்டம்பர் மாதத்தில் இரண்டாம் கட்டமாக ரசிகர்களை சந்திப்பார் என்று அப்போது சொல்லப்பட்டது. ஆனால், இதுவரை அவர் ரசிகர்களை சந்திக்கவில்லை.

இதனிடையே, கடந்த சில மாதங்களாகவே டுவிட்டரில் அரசியல் கருத்துக்களைப் பதிவிட்ட கமல்ஹாசன், மக்கள் பிரச்சனைக்காக களம் இறங்கி, அரசியல் கட்சி ஆரம்பிப்பேன் என்று அறிவித்து, அடுத்து தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் போக உள்ளேன் என அறிவித்துவிட்டார்.

அனைவரும் ரஜினிகாந்த்தான் அடுத்து அரசியல் கட்சி ஆரம்பிப்பார் என்று பேசிக் கொண்டிருந்த நிலையில், ரஜினிகாந்தை முந்திக் கொண்டு கமல்ஹாசன் அதற்கான ஆரம்பக் கட்ட வேலைகளை முடுக்கிவிட்டு விட்டார். இது மற்ற அரசியல் கட்சியினரிடமும், திரையுலகத்தினரிடமும், ரசிகர்களிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளளது.

போர் வரட்டும் எனக் கூறி ரஜினிகாந்த் காத்துக் கொண்டிருக்க, எதிர்ப்'போர்' வரட்டும் என புறப்பட்டுவிட்டார் கமல்ஹாசன்.

Post a Comment

Recent News

Recent Posts Widget