Ads (728x90)

விஜய் நடித்து வெளிவந்த 'மெர்சல்' படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி பெரிய வெற்றியையும், வசூலையும் பெற்றது. இப்படத்தைப் பற்றி பல வசூல் விவரங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த 2017ம் வருடத்தில் ஒரு நேரடித் தமிழ்ப் படம் பல தியேட்டர்களில் மூன்றாவது வாரத்தையும் கடப்பது முதல் முறை நிகழ்கிறது. இந்தப் படத்தின் வசூல் என்பது பெரிய வசூல்தான் என்பதற்கு இது ஒன்றே போதும்.

தமிழ்நாட்டில் சுமார் 500 தியேட்டர்கள் வரை இப்படம் வெளியிடப்பட்டதாகச் சொல்லப்பட்டது. இப்போதும் சுமார் 300 தியேட்டர்களுக்கும் மேல் இப்படம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தமிழ்நாட்டில் 120 கோடி ரூபாய் வசூலையும் வெளிநாடுகளில் 100 கோடி ரூபாய் வசூலையும் இப்படம் கடந்திருக்கிறது என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது மொத்த வசூல் நிலவரம். அதிலிருந்து 'ஷேர்' தொகையாக அதாவது பங்குத் தொகையாக சுமார் 110 கோடி ரூபாயை இப்படம் கொடுத்துள்ளது.

தமிழில் இந்த ஆண்டு வெளிவந்த படங்களில் முதல் முறையாக 100 கோடி ரூபாய் 'ஷேர்' கொடுத்த திரைப்படம் என்ற பெருமையை 'மெர்சல்' பெற்றுள்ளது. படத்தை வாங்கிய அனைவருக்கும் இந்தப் படம் லாபத்தைக் கொடுத்துள்ளது. இது போன்று பெரிய நடிகர்களின் படங்கள் வசூலித்தால் மட்டுமே திரையுலகம் கொஞ்சமாவது காப்பாற்றப்படும்.

Post a Comment

Recent News

Recent Posts Widget