Ads (728x90)

மெர்சல்’ படத்துக்குப் பிறகு விஜய்யை வைத்து இயக்க இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். விஜய்யின் 62வது படமான இதைப்  பற்றிய அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. அவ்வளவு ஏன்... ஏ.ஆர்.முருகதாஸ் தான் இயக்கப்  போகிறார் என்று கூட இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனாலும், படத்தைப் பற்றி ஏகப்பட்ட தகவல்கள்  வெளியாகிக் கொண்டேதான் இருக்கின்றன.

நமக்கு கிடைத்த லேட்டஸ்ட் தகவல்படி, பொங்கல் முடிந்ததும் ஷூட்டிங் தொடங்குகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இந்தப்  படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ‘அங்கமாலி டயரீஸ்’, ‘சோலோ’ போன்ற மலையாளப் படங்களுக்கு  ஒளிப்பதிவு செய்த கிரீஷ் கங்காதரன், விஜய் 62 படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். தேசிய விருது பெற்ற எடிட்டரான ஸ்ரீகர்  பிரசாத், இந்தப் படத்துக்கு எடிட்டராக கமிட்டாகியுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget