Ads (728x90)

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் நடித்துள்ள படம் அஞ்சனி புத்ரா. ரஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார், ஹர்சா இயக்கி உள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை படம் வெளிவந்தது. இந்தப் படத்தில் வழக்கறிஞர்களை இழிவுபடுத்தும் வசனம் இருப்பதாக கூறி பெங்களூரை சேர்ந்த வழக்கறிஞர்கள் 3 பேர் பெங்களூரு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
அஞ்சனிபுத்ரா படத்தில் வழக்கறிஞர்கள் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இடம்பெற்றுள்ளது. இது அனைத்து வழக்கறிஞர்களையும் அவமானப்படுத்துவதாகும், இந்த வசனத்தை நீக்க வேண்டும்.

இல்லாவிட்டால் படத்தை தடை செய்ய வேண்டும் என்று கூறிப்பட்டிருந்தது. மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம் வருகிற ஜனவரி 2ந் தேதி வரை படத்தை வெளியிட தடைவிதித்தது. ஆனால் படம் ஏற்கெனவே வெளிவந்து விட்டது. இதனால் நீதிமன்றத்தில் தனது தரப்பு கருத்தை தெரிவிக்க தயாரிப்பு தரப்பு முடிவு செய்துள்ளது.

"கோர்ட் தடைவிதித்திருப்பதாக எங்களுக்கு கோர்ட்டிலிருந்து எந்த தகவலும் வரவில்லை. படம் தற்போது தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. வழக்கறிஞர்கள் பற்றி தவறான வசனம் இடம்பெற்றிருந்தால் அதை நீக்க தயாராக இருக்கிறோம். யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்கவும் தயாராக இருக்கிறோம்" என்கிறார் தயாரிப்பாளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget