Ads (728x90)


கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்து வரும் மெகா படம் ஜெய்சிம்ஹா. அரசியல் கலந்த கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்திருக்கிறார்.

சமீபகாலமாக அழுத்தமான வேடங்களாக தேடிப்பிடித்து நடித்து வரும் நயன்தாரா, இந்த படத்தில் மீண்டும் கவர்ச்சிகரமான துள்ளலான வேடத்தில் நடித்திருக்கிறார்.

இந்த படத்தில் பாலகிருஷ்ணாவுடன் நயன்தாரா இணைந்துள்ள டூயட் பாடல்களில் அதிநவீன காஸ்டியூம்களில் அணிந்து கலக்கலாக நடனமாடியிருக்கிறாராம் நயன்தாரா.

மேலும், இந்த படம் ஜனவரி 12-ந்தேதி சங்கராந்திக்கு வெளியாகயிருக்கும் நிலையில், தற்போது படத்தின் பிரமோ ஷனை தொடங்கிருக்கிறார்கள். பர்ஸ்ட் லுக்கைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜெய் சிம்ஹா படத்தின் டீசர் வெளியிடப்பட்டு நான்கு மில்லியன் பார்வை யாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.

இந்த நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று விஜயவாடாவில் பிரமாண்டமாக நடைபெற்றுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget