
வலி. வடக்குப் பிரதேச சபையின் வட்டாரம் ஒன்றில் அவர் நேரடி வேட்பாளராகக் களமிறங்கவுள்ளார். தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் அவர் ஏற்கனவே கையெழுத்திட்டுவிட்டார் என்றும் அறியமுடிகின்றது.
முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச குடும்ப அரசியல் ஈடுபடுகின்றார் என்றும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தனது சகோதரரை அரசியலில் களமிறக்கி குடும்ப அரசியலில் ஈடுபடுகின்றார் என்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கடந்த காலங்களில் குற்றச்சாட்டு முன்வைத்திருந்தது.
இவ்வாறானதொரு நிலையிலேயே, நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசாவின் மகன் கலையமுதன் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் களமிறங்கியுள்ளார்.
இந்தியாவில் தங்கியிருந்த அவர் அங்கேயே பாடசாலை மற்றும் கல்லூரிப் படிப்புகளையும் பட்டப்படிப்பையும் முடித்தார். சில வருடங்களுக்கு முன்னரே நாடு திரும்பியிருந்தார்.
Post a Comment