Ads (728x90)


திரைப்பட நட்சத்திரங்கள் கலந்து கொண்டு விளையாடும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (சிசிஎல்) கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது.

இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மலையாளம் மற்றும் இந்தி நட்சத்திர அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்கள். 20 ஓவர் போட்டிகளாக இது நடத்தப்பட்டு வந்தது.

முறையான பயிற்சி இல்லாத சினிமா நட்சத்திரங்களால் 20 ஓவர்கள் வரை களத்தில் தாக்குபிடித்து நின்று விளையாட முடியவில்லை. களைத்துப் போகிறார்கள் என்ற குறை இருந்தது. அதனால் இந்த போட்டியை 10 ஓவர் போட்டியாக குறைத்து விட்டனார். இந்த போட்டிகள் அதிகபட்சம் 90 நிமிடங்கள் மட்டுமே நடக்கும். இதனால் போட்டியின் பெயரையும் சிசிஎல் 10 பிளாஸ்ட் என்று மாற்றியிருக்கிறார்கள்.

இதன் அறிமுக விழா சென்னையில் நடந்தது. இதில் சென்னை ரைனோஸ் அணியின் உரிமையாளர் ஸ்ரீகாந்த், கேரளா ஸ்ட்ரைகர்ஸ் அணியின் உரிமையாளர் தராஜ்குமார் மற்றும் ஸ்ரீப்ரியா ராஜ்குமார், மும்பை ஹிரோஸ் அணியின் உரிமையாளர் ராஜ்நாத், பெங்கால் டைகர்ஸ் அணியின் உரிமையாளர் போனி கபூர், தெலுங்கு வாரியர்ஸ் அணியின் உரிமையாளர் சச்சின் ஜோஷி, கர்நாடகா புல்டவுசர்ஸ் அணியின் உரிமையாளர் அஷோக் கெனி, சிசிஎல் நிறுவனர் விஷ்ணு இந்தூரி, கர்நாடகா புல்டவுசர்ஸ் அணியின் கேப்டன் சுதீப், கேரளா ஸ்ட்ரைகர்ஸ் அணியின் கேப்டன் பாலா, மும்பை ஹிரோஸ் அணியின் கேப்டன் சோஹைல் கான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget