மும்பையில் இருந்து கோல்கட்டாவிற்கு விமானத்தில் பயணம் செய்த இயக்குனரும், நடிகருமான பிரபுதேவா, அதே விமானத்தில் பயணம் செய்த இந்தியாவின் நட்சத்திர விளையாட்டு வீரங்கணை மேரிகோமை சந்தித்துள்ளார். இவர் ஆட்டத்தில் புலி என்றால் அவர் குத்து சண்டையில் புலி. அந்த சந்திப்பின் போது மேரிகோம் வாழ்க்கை வரலாற்று படம் பற்றி சிலாகித்து பேசியுள்ளார் பிரபுதேவா. அதேப்போல மேரிகோமும் பிரபுதேவாவின் ஏபிசிடி படத்தை விரும்பி பார்த்ததாக தெரிவித்துள்ளார்.இருவரும் இணைந்திருக்கும் படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கும் பிரபுதேவா, மேரிகோமை "இந்தியாவின் பெருமை" என்று வர்ணித்திருக்கிறார்.
அற்புதங்கள் நிறைந்தவர் என்றும் புகழ்ந்திருக்கிறார். பிரபுதேவா நடித்துள்ள களவாடிய பொழுதுகள் படம் வருகிற 29ந் தேதியும், குலேபகாவலி படம், பொங்கல் தினத்தன்றும் வெளிவருகிறது. அவற்றில் பிசியாக இருக்கிறார் பிரபுதேவா.
Post a Comment