
கடந்த 2015ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை இலங்கை அரசினால் 13 ஊடக இணையத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மகிந்த ஆட்சியை விடவும் சமகால அரசில ஊடக சுதந்திரம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலுள்ள பிரபல ஊடகமொன்று மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இந்த விடயம் வெளியாகியுள்ளது.
இந்த 13 வலைத்தங்களில் 4 அரச தலைவா் செயலக ஆணைக்கமைய முடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அரச தலைவா் புகழுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியிட்டமை தொடர்பில் 4 இணையத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளது.
இரண்டு இணையத்தளங்கள் போலியான செய்தி வெளியிட்டமைக்காக முடக்கப்பட்டுள்ளது. மற்றொரு இணையத்தளம் யாழ். நீதவானுக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பில் முடக்கப்பட்டுள்ளது.
மேலும் 2 இணையத்தளங்கள் ஆபாச செய்தி வெளியிட்டமைக்காக முடக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.
Post a Comment