Ads (728x90)


அமெரிக்காவில் நடந்த 'சபாஷ் நாயுடு' படப்பிடிப்பிற்குப் பிறகு சென்னை திரும்பிய கமல்ஹாசன், அதன் பின் அவர் அலுவலகத்தின் மாடிப்படியில் தவறி விழுந்து காலில் ஆபரேஷன் செய்து கொண்டார். சில மாத ஓய்விற்குப் பிறகும் அவர் பல்வேறு காரணங்களால் 'சபாஷ் நாயுடு' படப்பிடிப்பை மீண்டும் ஆரம்பிக்கவில்லை. அதை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார்.

அதன் பின் விஜய் டிவியின் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி அந்த நிகழ்ச்சியிலும் மறைமுகமாக அரசியல் பேசி பரபரப்பாக்கினார். அதில் மூன்று மாதங்கள் போய்விட்டது. 'பிக் பாஸ்' நிகழ்ச்சி ஆரம்பமான உடனேயே சென்னையில் உள்ள ராணுவ பயிற்சி அகடமியில் 'விஸ்வரூபம் 2' படப்பிடிப்பை ஓரிரு நாட்கள் நடத்தினார். இப்போது மீண்டும் அதே இடத்தில் படப்பிடிப்பை சில நாட்கள் நடத்தியுள்ளார்.

கடந்த நான்கு வருடங்களாக வருமா வராதா என்று இருந்த 'விஸ்வரூபம் 2' படத்தின் மொத்த பிரச்சனையையும் சில மாதங்களுக்கு முன்பே முடித்துவிட்ட கமல்ஹாசன், இப்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பை முடித்து படத்தை 2018ம் ஆண்டில் வெளியிட முடிவு செய்துள்ளார். விரைவில் 'விஸ்வரூபம் 2' படத்தின் டிரைலரும் வெளியாக உள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget