Ads (728x90)

தற்­போது பத­வி­யில் உள்ள கூட்டு அரசு 2020ஆம் ஆண்டு வரைக்­கும் பத­வி­யில் நீடிக்­கும் அதற்­கான பச்­சைக் கொடியை சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி காட்­டி­யுள்­ள­தாக அறி­ய­வ­ரு­கின்­றது.

ஐக்­கிய தேசி­யக் கட்­சிக்­கும் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சிக்­கும் இடை­யில் செய்து கொள்­ளப்­பட்ட உடன்­ப­டிக்­கை­யின் ஆயுள்­கா­லம் எதிர்­வ­ரும் 31ஆம் திக­தி­யு­டன் நிறை­வ­டை­கின்ற நிலை­யில், 2020ஆம் ஆண்­டு­வரை அதை நீடிப்­ப­தற்கு சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி பச்­சைக்­கொடி காட்­டி­யுள்­ளது என்று அறி­ய­மு­டி­கின்­றது.

தேர்­த­லில் மைத்­தி­ரி­பால சிறி­சேன அரச தலை­வர் தேர்­த­லில் வெற்­றி­பெற்று 2018ஆம் ஆண்டு ஜன­வரி 8ஆம் திக­தி­யு­டன் மூன்­றாண்­டு­க­ளா ­கின்­றன.
இதனை முன்­னிட்டு நடை­பெ­ற­வுள்ள நிகழ்­வின்­போதே ஒப்­பந்­த நீடிப்­புக் குக் கொள்­கை­ய­ள­வில் இணக்­கம் காணப்­பட்டு, உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தல் முடி­வ­டைந்த பின்­னர் ஒப்­பந்­தம் புதுப்­பிக்­கப்­ப­டும் என்று தெரி­ய­வ­ரு­கின்­றது.
கூட்டு அர­சில் மட்­டு­மின்றி உள்­ளூ­ராட்சி சபை­க­ளி­லும் கூட்டு அர­ச­மைப்­ப­தற்­கான யோசனை புதிய ஒப்­பந்­தத்­தில் உள்­வாங்­கப்­ப­ட­வுள்­ளது.

கூட்­ட­ர­சி­லி­ருந்து சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி வெளி­யே­ற­வேண்­டு­மென சுதந்­தி­ரக் கட்­சி­யின் அமைச்­சர்­கள் சிலர் அரச தலை­வ­ரி­டம் தொடர்ச்­சி­யா­கக் கோரிக்கை விடுத்­த­னர். டிசெம்­பர் 31ஆம் திக­தி­வரை பொறு­மை­காக்­கு­மாறு அவர்­க­ளுக்கு அரச தலை­வர் ஆலோ­சனை வழங்­கி­யி­ருந்­தார்.

அர­சி­யல் உறு­திப்­பாட்­டுத்­தன்­மையை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே அவர் இவ்­வாறு செய்­தி­ருந்­தார்.தற்­போது கூட்டு எதி­ரணி பல­மி­ழந்து வரு­கின்­றது. அதே­வேளை, மைத்­தி­ரி­யின் கை ஓங்­கி­வ­ரு­கின்­றது.

என­வே­தான், பொரு­ளா­தார வளர்ச்சி, எதிர்­கால நோக்கு உட்­பட முக்­கிய சில விட­யங்­களை கருத்­திற்­கொண்டு கூட்­ட­ரசை 2020ஆம் ஆண்டு வரை தொடர்­வ­தற்கு அரச தலை­வர் தரப்­பி­லி­ருந்து பச்­சைக்­கொடி காட்­டப்­பட்­டுள்­ளது என்று கூறப்­ப­டு­கின்­றது.

Post a Comment

Recent News

Recent Posts Widget