
அதன்படி பெரும்பாலும் எதிர்வரும் 22 ஆம் திகதிவரை விண்ணப்ப கால எல்லையை வழங்குவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக் குழு தீர்மானித்துள்ளதாக சட்டம் மற்றும் விசாரணை பிரிவுகளுக்கு பொறுப்பான மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹம்மட் தெரிவித்தார். பொலிஸ் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலளர் சந்திப்பில் கலந்துகொண்டே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்
21 மாவட்டங்களில் இன்று ( நேற்று) வேட்பு மனு கோரும் நடவடிக்கைகள் ஆரம்பமாகின. கிளிநொச்சி, முல்லை தீவு, மன்னார் மற்றும் வவுனியா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களிலேயே இந் நடவடிக்கைகள் ஆரம்பமாகின. அதிகமான உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் இடம்பெறும் அம்பாறை மற்றும் பதுளை மாவட்டங்களில் விஷேடமாக வேட்புமனு தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் இன்று (நேற்று) இடம்பெற்றன.
கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் நாளை 13 ஆம் திகதி நண்பகல் 12.00 மணியுடன் நிறைவுக்கு வருகின்றது. கடந்தவார இறுதியில் கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் இடம்பெறாத நிலையில் நேற்று அந் நடவடிக்கைகள் இடம்பெற்றதாக அறிய முடிகின்றது.
93 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்ப இறுதி திகதி எதிர்வரும் 15 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடைகிறது. எனினும் 248 உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பிலான விண்ணப்ப திகதி வித்தியாசப்படுவதால், மொத்தமாக 341 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் என பொதுவான ஒரு விண்ணப்ப முடிவுத் திகதியை நிர்ணயிப்பது குறித்து தேர்தல்கள் ஆணைக் குழுவின் கவனம் திரும்பியுள்ளது.
அதனால் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்ப இறுதித் திகதியை 22 ஆம் திகதிவரை நீடிக்க ஆணைக்குழு உத்தேசித்துள்ளது. இன்று ( நேற்று) இடம்பெறும் கூட்டத்தில் அது தொடர்பில் முடிவு செய்யப்படும் என்றார்
Post a Comment