
மேலும், வரும் 25 ம் தேதிக்கள் அனைத்து மீனவர்களும் கண்டுபிடிக்கப்படுவார்கள். மீனவர்களை 25 கப்பல்கள் மூலம் தேடி வருகிறோம். மாயமான மீனவர்கள் அனைவரும் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றதால் அவர்களுக்கு எச்சரிக்கை வழங்க முடியவில்லை. காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுக்கு நாள்தோறும் ரூ.250 வழங்கப்படுகிறது எனவும் தமிழக அரசு தனது பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளது. மேலும் புயலுக்கு 5 மீனவர்கள் பலியாகியுள்ளதாகவும் கூறியள்ளது.
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மீனவர்கள் விவகாரத்தில் துரிதமாக செயல்பட்டதாக தமிழக அரசு கூறுவது உண்மையில்லை. மீனவர் விவகாரத்தில் கேரளாவை போல் தமிழக அரசு துரிதமாக செயல்படவில்லை எனக்கூறினார்.
இதனிடையே, புயலில் மாயமான மீனவர்களை மீட்க எத்தனை ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன என விளக்கமளிக்க மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
Post a Comment