Ads (728x90)

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. ஜெ.,க்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், மரணம் தொடர்பாக புகார் தெரிவித்தவர்கள், முன்னாள் தலைமை செயலாளர்கள் உள்ளிட்ட பலருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில், இன்று (டிச.,22) சசிகலா, அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி, அவரது மகள் ப்ரீத்தா ரெட்டி ஆகியோருக்கு விசாரணை கமிஷன் சம்மன் அனுப்பி உள்ளது. சசிகலா, 15 நாட்களுக்குள் விசாரணை கமிஷன் முன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதாப் ரெட்டி மற்றும் ப்ரீத்தா ரெட்டி 10 நாட்களுக்குள் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் ஜெ.,க்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான மருத்துவ அறிக்கையை 10 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அப்பல்லோ நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ஜெ., மரணம் தொடர்பாக விசாரணையை கமிஷன் ஜனவரி 2ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget