15 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த படம் சார்லி சாப்ளின். பிரபு தேவா, பிரபு, லிவிங்ஸ்டன், அபிராமி, காயத்ரி ரகுராம் நடித்திருந்தார்கள். பரணி இசை அமைத்திருந்தார், சிவகுமார் ஒளிப்பதிவு செய்திருந்தார். ரோஜா கம்பைன்ஸ் சார்பில் எம்.காஜாமைதீன் தயாரித்திருந்தார். ஷக்தி சிதம்பரம் இயக்கி இருந்தார்.தற்போது இதன் இரண்டாம் பாகம் தயாராகிறது. முதல் பாகத்தில் நடித்த பிரபுதேவா, பிரபு நடிக்கிறார்கள். ஹீரோயின் காயத்ரி ரகுராமிற்கு பதிலாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். முதல் பாகத்தை இயக்கிய ஷக்தி சிதம்பரம் இயக்குகிறார். அம்மா கிரியேஷன் சார்பில் டி.சிவா தயாரிக்கிறார்.
"இதன் படப்பிடிப்புகள் நேற்று தொடங்கியது. முதல் பாகத்தின் கதைக்கும், இதற்கும் ஒரு சிறிய தொடர்பு மட்டுமே இருக்கும். மற்றபடி இது முற்றிலும் புதிய களம், புதிய கதை. முழுக்க முழுக்க காமெடி படம். முதல் பாகத்தில் இருந்த மாதிரியே பிரபுவும், பிரபுதேவாவும் இருப்பது ஆச்சயர்யமாக இருக்கிறது" என்கிறார் இயக்குனர் ஷக்தி சிதம்பரம்.
இது ஆள்மாறாட்ட காமெடி கலாட்டா. இதற்கான வசனங்களை கிரேஸி மோகன் எழுதியுள்ளார். தற்போது யங் மங் சங், குலேபகாவலி படத்தில் நடித்து வரும் பிரபுதேவா, அடுத்து இந்தப் படத்தில் நடிக்கிறார். ஷக்தி சிதம்பரம் இயக்கிய, ஜெயிக்கிற குதிர படம் வெளிவராத நிலையில் இந்தப் படத்தை இயக்குகிறார்.
Post a Comment