
ஆனால், இந்த தொகைக்கு ஆதரவாக அவ்வழக்கை அப்போது விசாரித்த முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஜிஎஸ் சிங்வி கருத்து கூறியுள்ளார்.
2ஜி ஏலத்தில் ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக அப்போதைய ஆடிட்டர் ஜெனரல் வினோத் ராய் தெரிவித்தார். இது பற்றி விசாரிக்க வேண்டும் என்று சுப்பிரமணியம் சாமி வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கு சுப்ரீம் கோர்ட்டிற்கு வந்தபோது, அப்போதைய நீதிபதி ஜி.எஸ்.சிங்வி, 2ஜியின் அனைத்து லைசென்ஸ்களையும் ரத்து செய்து உத்தரவிட்டார். முறைகேட்டை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் என்றும் உத்தரவிடப்பட்டது.
நீதிபதி சைனி தலைமையில் டில்லி சிபிஐ கோர்ட்டில், விசாரணை நடந்தது. முடிவில், போதிய ஆதாரங்களை சிபிஐ சமர்ப்பிக்கவில்லை; குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று கூறி, குற்றம்சாட்டப்பட்ட கருணாநிதி மகள் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராஜா உள்பட அனைவரையும் சைனி விடுதலை செய்தார்.இது குறித்து, ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி சிங்வி, ஒரு ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
Post a Comment