பிலிப்பைன்சில் ஏற்பட்ட நிலச்சரிவில், 30 பேர் பலியாகினர்; 23 பேர் காணாமல் போயுள்ளனர். தென்கிழக்கு ஆசிய நாடான, பிலின்பைன்சின், பிலிரான் தீவில், சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், 30 பேர் பலியாகினர்; 23 பேர் காணாமல் போயுள்ளனர்.பல இடங்களில், மின் கம்பங்கள் சாய்ந்ததால், தீவின் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கி உள்ளன. மீட்பு படையினர், போலீசார், காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். புயல் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டோரை மீட்கும் பணி, போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது.
Post a Comment