பெர்த் டெஸ்ட் போட்டியில் வென்று தன் கேப்டன்சியில் ஆஷஸ் மகுடத்தை இங்கிலாந்திடமிருந்து பறித்து ஆஸ்திரேலியாவுக்குரியதாக்கிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மகிழ்ச்சியின் உச்ச கட்டத்தில் உள்ளார்.பெர்த் டெஸ்ட் முடிந்து அவர் கூறியதாவது:
அங்கீகாரம் கிடைத்ததில் மகிழ்ச்சி. என்னுடைய அதிகபட்ச ஸ்கோரை எட்டியதிலும் மிட்செல் மார்ஷுடன் மிகப்பெரிய கூட்டணி அமைத்ததிலும் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்தக் கூட்டணி எங்களை ஆட்டத்துக்குள் செலுத்தியது. சக வீரர்களுக்காக பெருமைப் படுகிறேன். இன்னிங்சை இங்கு முடித்து பெர்த்தில் ஆஷஸ் கலசத்தை மீட்டதில் பெருமை கொள்கிறேன். ஒவ்வொரு ஆட்டத்திலும் 20 விக்கெட்டுகளை வீழ்த்துவதில் பவுலர்கள் அபாரம்.
கடந்த இரவு வானிலை பயங்கரம், நான் பெர்த்தில் இப்படிப் பார்த்ததில்லை. ஆனால் வானிலை சரியாகிவிட்டால் நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என்று கருதினோம்.
அணித்தேர்வினருக்கு பாராட்டுக்கள், அவர்கள் சில தைரியமான முடிவுகளை எடுத்தனர். முதலில் இந்த வெற்றியைக் கொண்டாடுவோம், பிறகு, ஆம் மெல்போர்ன் அங்கு வென்று 4-0, பிறகு சிட்னியில் 5-0. எங்களுக்குத் தகுதியான இந்த முடிவைப் பெற்றுக் கொடுத்த அனைவரும் அபாரமானவர்கள்.
ஆஷஸ் தொடரை வெல்லும் ஒரு அணிக்கு கேப்டனாக இருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. இந்தக் கணத்தைத்தான் அனைவரும் எதிர்பார்த்தோம். நிறைய தயாரிப்புகள் அவையனைத்தும் களத்தில் கைகொடுத்ததில் திருப்தி. 400 நல்ல ஸ்கோர்தான், ஆனால் நாங்கள் ஒருமுறைதான் பேட் செய்ய வேண்டுமென்று நினைத்தோம். பவுலர்கள் மிகப்பெரிய பணியை செய்துள்ளனர். நேதன் லயன் தனித்துவமான பவுலிங்.
நிறைய உணர்ச்சி வெளிப்பாடுகள், இன்று வீரர்கள் கொண்டாட்டம் போடுவார்கள். ஹேசில்வுட் அபாரமாக வீசினார். பேர்ஸ்டோவை முதலில் வீழ்த்தினார். ஆஷஸ் கலசத்தை மீட்டுவிட்டோம், எனக்கு உண்மையில் பெரிய அளவில் பெருமையாக உள்ளது.
இவ்வாறு கூறினார் ஸ்டீவ் ஸ்மித்
Post a Comment