
Zanco tiny t1 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த போன், உலகின் மிகச் சிறிய மொபைல்போன் என்று விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறது. இதில் 300 எண்களைச் சேமிக்கலாம். போன்புக் போல பயன்படுத்தலாம்.
பரிசளிப்பதற்கும் ஏற்ற பொருள் என்கிறார்கள். இந்த போனில் பேசலாம், குறுஞ்செய்தி அனுப்பலாம், பெறலாம். “நாங்கள் நீண்டகாலமாக மைக்ரோ மொபைல்போன் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். பலரும் இதை உருவாக்க இயலாது என்றார்கள். t1 போனில் பாதியளவே உருவாக்க எண்ணினோம். ஆனால் நடைமுறையில் இதுதான் சாத்தியமானது.
இதிலும் கீபோர்டு, டிஸ்ப்ளே, பேட்டரி போன்றவை இருக்கின்றன. ஒருமுறை சார்ஜ் செய்தால் 3 நாட்களுக்குத் தாக்குப் பிடிக்கும். 180 நிமிடம் பேச முடியும். இதை உருவாக்கியதில் பெருமைகொள்கிறோம். முதல்முறை இந்த போனைப் பார்த்தால் நம்ப முடியாது. இரண்டாவது முறை எடுத்துப் பார்ப்பீர்கள். மூன்றாவது முறை வாங்கிவிடுவீர்கள். எந்த மொபைல் நெட் ஒர்க்கிலும் இது வேலை செய்யும். நானோ சிம் பயன்படுத்த வேண்டும். இது 2ஜியில் மட்டுமே வேலை செய்யும். அதனால் உங்கள் நாட்டில் 2ஜி இருக்கிறதா என்று பார்த்து வாங்குங்கள். ஆஸ்திரேலியா, ஜப்பானில் 2ஜி சேவை கிடையாது” என்கிறார் ஜான்கோ நிறுவனர்களில் ஒருவரான ஷாஜாட் டாலிப்.
Post a Comment