Ads (728x90)

உள்ளுராட்சி சபைகளுக்குமான தேர்தல்களை பெப்ரவரி மாதம், ஆரம்பப் பகுதியில் நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசபிரிய தேரிவித்துள்ளார்.

இதேவேளை, இதுவரையில் தேர்தல் வேட்புமனுக் கோரப்படாத உள்ளுராட்சி மன்றங்களுக்கு டிசம்பர் 04ஆம் திகதி, வேட்புமனுக்கள் கோரப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

சட்டப் பிரச்சினைகளுக்கு உட்படாத 93 உள்ளுராட்சி மன்றங்களுக்கு தேர்தல்களை நடத்துவதற்கு கடந்த வாரம் தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்தமையினை அடுத்து, கடந்த 27ஆம் திகதி அச்சபைகளுக்கு வேட்புமனுக்கள் கோரப்பட்டன.

இந்த நிலையில், உள்ளுராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணய வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் வாபஸ் வாங்கிக் கொள்ளப்பட்டன.

இதனை அடுத்து,உள்ளுராட்சி சபைகளுக்கு தேர்தலை நடத்துவதற்கான அனைத்து சட்டப் பிரச்சினைகளும் நீங்கியுள்ளன.

இந்த நிலையிலேயே, பெப்ரவரி ஆரம்பத்தில் அனைத்து உள்ளுராட்சி சபைகளுக்குமான தேர்தல்களை நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget