
நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் இன்று காலை நடைபெற்ற ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் மாநாட்டில் பிரதம விருந்தினராக முதலமைச்சர் கலந்துகொண்டிருந்தார்.
இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிளவு நிலை தொடர்பாக ஊடகவியலாளர்கள் முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பியிருந்தார்கள். இதற்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவுபடவில்லை, பிளவுபட்டவர்கள் அனைவரும் மீண்டும் திரும்பி வந்து விடுவார்கள், எல்லாம் நல்லதாகவே நடக்கும்” எனக் கூறியுள்ளார்.
மேலும், இது தொடர்பில் விரிவாக கருத்துக்களைக் கூற முதலமைச்சர் மறுத்துவிட்டார்.
Post a Comment