
பிரிட்டன் அமைச்சரவை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், அந்நாட்டின் பாதுகாப்புத் துறை (எம்15) தலைவர் ஆண்ட்ரு பார்க்கர் கூறும்போது, “பிரதமர் தெரசா மேவை கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக கடந்த வாரம் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் கூட்டாக இணைந்து லண்டன் மற்றும் பர்மிங்ஹாம் நகரில் சோதனை நடத்தி அந்த சதித் திட்டத்தை முறியடித்தனர்.
இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். பிரதமரின் இல்லத்துக்கு அருகே ஒரு பையில் வெடிகுண்டை வைத்து வெடிக்கவும் கத்தியைக் கொண்டு பிரதமர் மீது தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது” என்றார்.
லண்டன் மாநகர போலீஸார் கூறும்போது, “வடக்கு லண்டனைச் சேர்ந்த ஜகாரியா ரஹ்மான் (20) மற்றும் பர்மிங்ஹாம் நகரைச் சேர்ந்த முகமது அகிப் இம்ரான் (21) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.
Post a Comment