Ads (728x90)

சபரிமலை படிபூஜைக்கான முன்பதிவு 2034ம் ஆண்டு வரை முடிந்து உள்ளது. இதனால் பக்தர்கள் படி பூஜை செய்ய 17 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். சபரிமலையில் அதிக கட்டணம் உடைய பூஜை படிபூஜை.

18 படிகளிலும் பட்டு விரித்து அதில் குத்துவிளக்கு தேங்காய் மற்றும் நைவேத்ய பொருட்கள் வைத்து தந்திரி பூஜை நடத்துவார். 18 படிகளிலும் 18 மலை தேவதைகளுக்காக இந்த பூஜை நடத்தப்படுகிறது. ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் வரை இந்த பூஜை நடைபெறும்.

இந்த நேரத்தில் பக்தர்கள் படியேற முடியாது என்பதால் மண்டல மகரவிளக்கு காலத்தில் படிபூஜை நடைபெறாது. மாத பூஜை, விஷூ, திருவிழா போன்றவற்றுக்காக நடை திறக்கும் போது படிபூஜை நடைபெறும்.

இதற்கான முன் பதிவு 2034 -ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை முடிந்து விட்டது. இதனால் பக்தர்கள் இனி படிபூஜை நடத்த 17 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

75 ஆயிரம் ரூபாய் செலுத்தி தற்போது முன் பதிவு செய்யலாம், படி பூஜை செய்யும் காலத்தில் அப்போதைய கட்டணத்தை கூடுதலாக செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்பதிவு ஏற்கப்படுகிறது.

Post a Comment

Recent News

Recent Posts Widget