Ads (728x90)

கடுகதி புகையிரத சேவைகளுக்கு பதிலாக சொகுசு பேருந்து சேவைகளை இலங்கை போக்குவரத்து சபை மேற்கொண்டுள்ளது.

காங்கேசன்துறை , யாழ்ப்பாணம் மற்றும் கண்டி உள்ளிட்ட தூர இடங்களுக்கு இந்த சேவை இன்று காலை 5 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டதாக இலங்கை போக்குவரத்து சபையின் உயர் அதிகாரி பிஎச்ஆர்ரி சந்திரசிறி தெரிவித்தார்.

கடுகதி புகையிரத சேவைகள் இடம்பெறாததினால் 5 சொகுசு பேருந்துகளை சேவையில் ஈடுபட்டனா்.

புகையிரத பிரிவில் இடம்பெற்று வரும் வேலைப்பணிப்புறக்கணிப்பின் காரணமாக பயணிகள் எதிர்நோக்கும் சிரமங்களை தவிர்க்கும் நோக்கில் இலங்கை போக்குவரத்து சபை 5600 பேருந்துகளை போக்குவரத்தில் ஈடுபடுத்தியுள்ளது.

புகையிரத பருவகாலச்சீட்டை பயன்படுத்தி இலவசமாக இலங்கை பேருந்து சேவையை பெற்றுக்கொள்வதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget