
தனித்து தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் அல்லது தமிழரசுக் கட்சியுடன் இணைந்து களமிறங்க வேண்டும் என்ற நிலமை அந்தக் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.
ஆசனப் பங்கீட்டில் ஏற்பட்ட முரண்பாட்டால் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்தது ரெலோ அமைப்பு. அறிவிப்பின் பின்னர் நேற்றுமுன்தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான கட்சிகளுடன் சந்திப்புகளை நடத்தியது.
ஈ.பி.ஆர்.எல்.எவ். அமை ப்பை முதலில் சந்தித்துப் பேசியது. தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் ஈ.பி.ஆர்.எல்.எவ். மேற்கொள்ளவிருந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதைப் பிற்போடுமாறு கோரியது. அதற்கு ஈ.பி.ஆர்.எல்.எவ். இணங்கவில்லை.
அடுத்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலா் வீ. ஆனந்தசங்கரியை ரெலோ சந்தித்தது. சிறிரெலோ அமைப்பு தம்முடன் நீண்டகாலம் இருக்கின்றனர்.
அவர்கள் இந்தக் கூட்டணியில் இருப்பார்கள் என்று அந்தச் சந்திப்பில் கூறப்பட்டதால் ரெலோ அதிருப்தியடைந்தது.
புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த் தனை நேற்றுமுன்தினம் மாலை ரெலோ சந்தித்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதற்கு சித்தார்த்தன் பச்சைக் கொடி காட்டவில்லை.
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸுடன் பேசுவதற்கு ரெலோ நேற்றுத் திட்டமிட்டாலும் அது சாத்தியப்படவில்லை. அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தியிருந்தார். அதில் ரெலோ அமைப்பைக் கடுமையாக விமர்சித்தார்.
‘கொள்கை ரீதியான வெளியேற்றங்கள் என்றால் ஏற்க முடியும். அதனை விடுத்து எங்களுக்கு எதிரான கொள்கைதான் சரியானது என்று இறுதிவரை நியாயப்படுத்திக் கொண்டிருந்தவர்கள் ரெலோ அமைப்பினர்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியிலும் பார்க்க அதிகமாக அதனை நியாயப்படுத்தியவர்கள் ரெலோ அமைப்பினர். தமது ஆசனப் பங்கீட்டுப் பிரச்சினைக்காக வெளியேறி வருபவர்களுடன் பேசுவதில் அர்த்தமில்லை.”- என்று அவர் கூறினார்.
ரெலோ எடுத்த முயற்சிகள் அனைத்தும் பிசுபிசுத்துப் போயுள்ள நிலையில் அந்த அமைப்புக்கு இரு தெரிவுகள் மட்டுமே முன்னுள்ளன.
Post a Comment