Ads (728x90)

" நடைபெற இருக்கும் உள்ளூராட்சி சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி பெறும் " என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

"கடந்த சில தினங்களாக பங்காளி கட்சிகள் மற்றும் கட்சிகளிடையேயும் உறுப்பினர்களாக யாரை நிறுத்துவது? தொடர்பில் தொடர்ந்து ஆலோசனைகள் இடம்பெற்றுவருகின்றது. அநேகமான சபைகள் தொடர்பில் வேட்பாளர் பட்டியலில் இணக்கம் எட்டப்பட்டிருக்கின்றது.மக்கள் மத்தியில் இத் தேர்தல் தொடர்பில் மிகுந்த ஆர்வத்தில் இருக்கின்றார்கள்.

சாவகச்சேரி நகரசபை வேட்பு மனுதாக்கல் தொடர்பில் எழுந்த பிரச்சனை தற்பொழுது தீர்கப்பட்டிருக்கின்றது. மற்ற இடங்களிலும் இப்படியான குழப்பங்கள் இருந்து கொண்டுதான்  இருக்கிறது. இருந்த போதிலும் நாங்கள் தற்பொழுது ஒவ்வொரு இடங்களிலும் பிரச்சனைகளை தீர்த்துக்கொண்டு வருகின்றோம்.

Post a Comment

Recent News

Recent Posts Widget