Ads (728x90)


தற்சமயம் ஒரே நேரத்தில் இரண்டு பெண் இயக்குனர்களின் படங்களில் நடித்து வருகிறார் பிருத்விராஜ். முதன்முதலாக பிருத்விராஜ் - பார்வதியை ஜோடியாக வைத்து 'மை ஸ்டோரி' படப்பிடிப்பை ஆரம்பித்த ரோஷினி தினகருடன் பிருத்விராஜூக்கு பாதியில் மனகசப்பு ஏற்பட்டது. பின் பஞ்சாயத்து பேசப்பட்டு, ஒருவழியாக தற்போது மீண்டும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது..

இதே பிருத்விராஜ்-பார்வதி ஜோடியை வைத்து இன்னொரு படத்தை 'பெங்களூர் டேய்ஸ்' புகழ் அஞ்சலி மேனன் இயக்கி வருகிறார். இந்த இரண்டு படங்களிலும் தான் மாறி மாறி நடித்து வருகிறார் பிருத்விராஜ் ஜனவரிக்குள் தான் சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு வேலைகளை முடித்து விடுமாறு இந்த இரண்டு இயக்குனர்களுக்கும், கெடு விதித்துள்ளார் பிருத்விராஜ்.

காரணம் பிப்ரவரி மாதத்தில் இருந்து, தான் நடிக்கவுள்ள 'ஆடு ஜீவிதம்' படத்திற்காக உடல் எடையை கூட்ட இருக்கிறாராம். தற்போது நடித்துவரும் படங்களில் ஏதாவது ஒரு சிறிய காட்சியை திரும்ப எடுக்கவேண்டும் என்றால் கூட, எடைகூடிய தனது உருவம் செட்டாகாது என்பதனால் தான் இந்த டைம்லைன் கொடுத்துள்ளாராம் பிருத்விராஜ்.

Post a Comment

Recent News

Recent Posts Widget