Ads (728x90)

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி பிரஜா ராஜ்ஜியம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியது போன்று இப்போது அவரது தம்பியான நடிகர் பவன் கல்யாணும் ஜனாசேனா பார்ட்டி என்றொரு கட்சியை தொடங்கியிருக்கிறார்.

அடுத்த ஆண்டு ஆந்திராவில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அவரது கட்சி தனித்து போட்டியிடுகிறது.

அதனால் இப்போது தனது கட்சியின் பிரசாரத்தை தொடங்கிவிட்டார் பவன்கல்யாண். அந்த வகையில், கடந்த நான்கு நாட்களாக, சலோ சல் யாத்திரையை தொடங்கிய அவர் வைசாக், ராஜமந்திரி, விஜயவாடா உள்பட பல நகரங்களில் மக்கள் முன்பு பேசினார்.

அப்போது தனது கட்சியின் கொள்கைகள் குறித்து பேசாதபோதும், தனது கட்சியில் நல்ல தலைவர்கள், இளைஞர்களுக்கு அதிக இடமளிக்கப்போவதாக கூறியுள்ளார்.

மேலும், விஜயவாடாவில் ஒரு படகு விபத்தில் இறந்து போனவர்களின் உறவினர்களை அழைத்து பேசிய பவன் கல்யாண், தனது அண்ணன் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் கட்சியில் இடம்பெற்றிருந்த சில நண்பர் கள் அவரை ஏமாற்றி விட்டது பற்றியும் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget