
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, தனது நீண்டநாள் காதலியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவை, இத்தாலியில் உள்ள போர்கோ பினோசியிடோ ரிசார்ட்டில், கடந்த 11ம் தேதி திருமணம் செய்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில், விராட் கோஹ்லி மற்றும் அனுஷ்காவின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். மற்ற பிரபலங்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை.
இவர்களுக்காக, வரும் 21ம் தேதி டில்லியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விராட் கோஹ்லி - அனுஷ்கா சர்மா திருமணம் நடைபெற்ற இடம், இத்தாலியின் துஸ்கனி பகுதியில் உள்ள போர்கோ பினோசியிடோ ரிசார்ட்டில் நடைபெற்றது. இந்த ரிசார்ட் தான், உலகின் இரண்டாவது காஸ்ட்லியான ரிசார்ட் ஆகும். இந்த ரிசார்ட்டில் நிகழ்ச்சி நடத்துபவர்கள், வாரம் ஒன்றிற்கு வாடகையாக 1,47,312 அமெரிக்க டாலர்கள் வசூலிக்கப்படுகிறது.
உலகின் அதிக காஸ்ட்லியான ரிசார்ட்கள்...- வார வாடகை அடிப்படையில்
முதலிடத்தில் கோஸ்டா ரிகாவின் ஹெசிண்டா சானடா இஸ்- 1,92,500 அமெரிக்க டாலர்கள்
இத்தாலியின் போர்கோ பினோசியிடோ- 147,312 அமெரிக்க டாலர்கள்
இத்தாலியின் சான்டோ பியட்ரோ - 1,46,944 அமெரிக்க டாலர்கள்
பிரான்சின் சாலேட் எடில்வெயீஸ் - 1,45,000 அமெரிக்க டாலர்கள்
Post a Comment