
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கு – கிழக்கில் தரமான – பொருத்தமான வேட்பாளர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு களமிறக்கும். கூட்டமைப்பின் வெற்றியை எவராலும் அசைக்க முடியாது.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
“கூட்டமைப்பின் மூன்று பங்காளிக் கட்சிகளும் தற்போது வேட்பாளர் தெரிவில் ஈடுபட்டுள்ளன. வேட்பாளர்கள் தெரிவில் இளையோருக்கும், பெண்களுக்கும் முக்கியத்துவம் வழங்கப்படும். வடக்கில் மட்டுமல்ல கிழக்கிலும் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் முஸ்லிம்கள் வேட்பாளர்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள்.
வடக்கு-கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எவராலும் அசைக்கமுடியாது. கூட்டமைப்பின் வெற்றி உறுதி” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment