
தமது வேட்பாளர் பட்டியலில் இருந்த பெயர் ஈ.பி.டி.பி.யினரால் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வேட்பாளர் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்தமையைக் கண்டு வேட்பு மனுவை நேற்றுத் தாக்கல் செய்யாமல் பின்வாங்கினார்கள். சாவகச்சேரி நகர சபைக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 11ஆம் திகதி ஆரம்பமானது. நாளை 14ஆம் திகதி மதியம் வரையில் இடம்பெறவுள்ளது.
இந்தச்சபைக்கு போட்டியிடுவதற்காக ஈ.பி.டி.பி. தனது வேட்புமனுவை நேற்றுக் காலை தாக்கல் செய்தது.
சாவகச்சேரி நகர சபைக்கான தமது வேட்புமனுத் தாக்கல் நேற்று மாலை இடம்பெறும் என்று சிறிலங்கா பொதுமக்கள் முன்னணியினரால் ஊடகங்களுக்கு நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்துக்கு நேற்று மாலை வருகை தந்த அந்தக் கட்சியினர், தமது வேட்புமனுவில் உள்ளடக்கப்பட்டுள்ள ஒருவரின் பெயர், ஈ.பி.டி.பியினரன் வேட்பாளர் பட்டியலில் இருந்ததை அவதானித்துள்ளனர்.
இதனையடுத்து, சாவகச்சேரி நகரசபைக்கான வேட்புமனுவை சிறிலங்கா பொதுமக்கள் முன்னணி நேற்றுத் தாக்கல் செய்யவில்லை.
Post a Comment