
இவ்வாறு வடக்கு மாகாண நிதி அமைச்சரும், முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் இறுதி பாதீடு சபையில் நேற்று முன்வைக்கப்பட்டது.
2018ஆம் ஆண்டுக்கான பாதீட்டு முன்மொழிவுகளை வடக்கு மாகாண முதலமைச்சசர் சி.வி.விக்னேஸ்வரன் முன்வைத்தார். தொடர்ந்து அவர் நீண்ட உரையாற்றினார். அவரது உரையின் சுருக்கம் வருமாறு:
வடக்கு மாகாணம் தனது உள்ளக வள வாய்ப்புக்கள் ஊடாக வேலை வாய்ப்புக்களை உருவாக்குதல், மக்களுக்கான வருமான மட்டத்தினை அதிகரிக்கச் செய்தல், கிராமிய பொருளாதாரங்களை அபிவிருத்தி செய்தல், மாகாண மட்டத்தில் உணவுப் பாதுகாப்பினை உறுதிப்படுத்தல், சிறிய நடுத்தர விவசாயிகள் மற்றும் முயற்சியாளர்களுக்கு புதிய சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்தி ஊக்குவித்தல், சிறிய நடுத்தர முயற்சியாளர்களது திறன்களை விருத்தி செய்தல், சுற்றுலா கைத்தொழிலை ஊக்குவித்தல், வறுமைத் தணிப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்தல், போதைப் பொருள்களின் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தல், சிறுநீரக நோய்த் தடுப்பு நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தல், போசாக்கு நிகழ்ச்சித் திட்டங்களை செயற்படுத்துதல் போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகின்றது.
மனிதவள மேம்பாட்டினை நோக்காகக்கொண்டு கல்வி மற்றும் சுகாதாரத்துறைகளுக்கு பொருத்தமான அபிவிருத்தித்திட்டங்கள் போன்ற முக்கியமான விடயங்களில் 2018ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கவனம் செலுத்த முனைந்துள்ளது.
2018ஆம் ஆண்டுக்கான வடக்கு மாகாண இலக்குகளாக நாளொன்றுக்கு பாலுற்பத்தி ஒரு லட்சத்து 30ஆயிரம் லீற்றர்களாகவும், முட்டை உற்பத்தியினை ஒரு லட்சமாகவும், இறைச்சி உற்பத்தியினை 35 ஆயிரம் கிலோ கிராமாகவும் ஆகவும் உயர்த்தும் முகமாக பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன.
2018ஆம் ஆண்டு கால்நடை உற்பத்திகள் மூலமான பண்ணையாளர்களின் வருவாயினை மேலும் 15 சதவிகிதம் அதிகரிப்பதற்கு ஏதுவாக கால்நடை உற்பத்திகளை இறக்குமதி செய்வதனை இயன்றளவுக்கு குறைத்துக்கொள்ளும் வகையிலும் அதிகளவில் வர்த்தக ரீதியிலான கால்நடை பண்ணைகளை உருவாக்கும் வகையிலும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்த மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது- என்றார்.
முதலமைச்சர் தனது உரையில் தொழில் வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையிலான வரவு செலவுத் திட்டம் என்று கூறிய நிலையில் அதில் வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:
Post a Comment