வடக்கு மாகாண சபை உறுப்பினர் கே.சயந்தனுக்கும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தென்மராட்சி அமைப்பாளர் க.அருந்தவபாலனுக்கும் இடையிலான முறுகல் இன்னமும் தீர்ந்தபாடில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.சாவகச்சேரி பிரதேச சபைக்கான வேட்பாளர் தெரிவு தொடர்பில் நேற்றைய தினமும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
சாவகச்சேரி பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் தெரிவுக் கூட்டத்தை கட்சியின் தென்மராட்சி அமைப்பாளரான க.அருந்தவபாலன் தனது வீட்டில் வைத்துள்ள கட்சி அலு வலகத்தில் நடத்தியுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகச் சென்ற வடக்கு மாகாண சபை உறுப்பினர் கே.சயந் தனை, நடப்பது ஒரு தனிப்பட்ட கலந்துரையாடல் என்று கூறி அங்கிருந்தவர்கள் திருப்பி அனுப்பியுள்ளனர்.
எனினும் வேட்பாளர் தெரிவு தொடர்பில் அங்கு ஆராயப்பட்டதாகச் சயந்தனின் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையே தான் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியில் தொடர்வதா இல்லையா என்பது தொடர்பில் கட்சித் தலைமையுடன் பேசுவதற்காக மூவர் கொண்ட குழு ஒன்றை அருந்தவபாலன் தெரிவுசெய்துள்ளார் என்று கூறப்படுகின்றது.
Post a Comment