
அதற்கான ஏற்பாடுகளை இராணுவத்தினர் செய்து வருகின்றனர். அந்தப் பகுதியில் தகனம் செய்வதற்கான மேடை மற்றும் பந்தல் அமைப்புக்கள் என்பவற்றை இராணுவத்தினர் அமைத்தனர்.
விகாராதிபதியின் உடலை முற்றவெளியில் தகனம் செய்வதற்கு யாழ்ப்பாணம் மாநகர சபையிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. மாநகர சபை அதற்கு அனுமதி வழங்கவில்லை.
தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்ட நினைவுத் தூபிக்கும் கோட்டைக்கும் இடைப்பட்ட பகுதியில் விகாராதிபதியின் உடலைத் தகனம் செய்யத் தீர்மானிக்கப்பட்டது.
இந்த இடம் தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களத்துக்குச் சொந்தமானது. அங்கு தகனம் செய்ய கொழும்பு அரசு அனுமதி வழங்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
விகாராதிபதி ஞானரத்ன தேரர் சுகவீனம் காரணமாக கொழும்பு சிறி ஜெயவர்த்தனபுர மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
சிகிச்சை பயனின்றி கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
அவரது உடல் உலங்குவானூர்தி மூலம் நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணம் கொண்டுவரப்பட்டது. நாகவிகாரையில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இறுதிக்கிரியைகள் இன்று நடைபெறவுள்ளன.
Post a Comment