புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்குப் போட்டியிட இருந்த பெண் ஒருவரைத் தடுத்து வைத்து அச்சுறுத்திய குற்றச்சாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
புதுக்குடியிருப்பு பொலிஸில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட் டுக்கு அமைவாகவே சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தெரிவித்ததாவது:
உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு புளொட் அமைப்பின் சார்பில் போட்டியிட பெண் வேட்பாளர் ஒருவரை வடக்கு மாகாண விவசாய அமைச்சர் சிவனேசன் தெரிவு செய்துள்ளார். வேட்புமனுவில் கையெழுத்திடுவதற்கு புதன்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகனின் அலுவலகத்திற்கு அவர் சென்றார்.
அலுவலகத்திலிருந்த நபர் ஒருவர், பெண் வேட்பாளருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தார். அவரை வேறு இடத்திற்குப் பலவந்தமாக அழைத்துச் சென்று தடுத்து வைத்துள்ளார். நேற்றுமுன்தினம் மாலையே விடுவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் இன்று (நேற்று) பொலிஸ் நிலையத்திற்கு வந்து முறைப்பாடு பதிவு செய்தார். அவரை அச்சுறுத்திய நபரை நாம் கைது செய்துள்ளோம். பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த அறிவுறுத்தியுள்ளோம் – என்று குறிப்பிட்டார்கள்.
முல்லைத்தீவில் கடத்தி செல்லப்பட்ட பெண் வேட்பாளர் தனக்கு நடந்ததை கூறுகிறார்.
https://www.facebook.com/page.tamil.5/videos/2020670408218546/?hc_ref=ARTtQ_6HNM9ZhJHkO1tJTH4z6ztuDEUhVAIk-LaOmjt0aOGSaVCdYw_iBtq1OsqGfhs&pnref=story
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment