உங்களுடைய உரிமைகளுக்கு மட்டும் அல்லாது மற்றயவர்களது உரிமைகளுக்கும் குரல்கொடுத்தல் என்ற தொனிப் பொருளில் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் ஏற்பாட்டில் இளைஞர் தலைமைத்துவ அணியுடன் ஒன்றுசேர்ந்து சமாதானம், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான நடைபவனி கொழும்பில் இடம்பெற்றது.சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற இந்த நடைபவனியில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
மதிப்பான வாழ்க்கை, சுதந்திரம், சமத்துவம், சுதந்திரமான நடமாட்டம், அரசியல் சுதந்திரம், அமைதியான ஒன்றுகூடல், அடிப்படை வசதிகளையும் சேவைகளையும் பெற்றுக்கொள்வதற்கான உரிமை, எதேச்சதிகாரமான கைதிகள் தொடர்பான தவிர்ப்பு, காணாமற்போவதைத் தடுத்தல்போன்ற விடயங்கள் நடைபவனியில் வெளிப்படுத்தப்பட்டன.
வேற்றுமையில் ஒற்றுமை, பல்லினத்தன்மைக்கு மதிப்பளித்தல், அனைவரையும் உள்வாங்கி தீர்மானமெடுத்தல், பன்மத, பல கலாசாரங்களுக்கு மதிப்பளித்தல் என்பவற்றின் முக்கியத்துவம் வெளிக்காட்டப்பட்டதுடன் நிரந்தரமான சமாதானத்துக்கு அவற்றின் அவசியமும் நடைபவனியில் வலியுறுத்தப்பட்டது.
இந்த நடைபவனியில் நல்லிணக்க அமைச்சின் இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால, தேசியக் கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ச டி சில்வா, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலர் வே.சிவஞானசோதி, மனித உரிமைகள் ஆணையாளர் கலாநிதி தீபிக்கா உடகம உள்ள டங்கலாக பல முக்கிய சிறப்புப் பிரதிநிதி கள் கலந்துகொண்டனர்.
Post a Comment