
இதுகுறித்து சவுதியின் சுங்க வரித்துறை நிர்வாகம் தரப்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட கடிதத்தில் கூறும்போது, "சால்வா எல்லைப்பகுதி திங்கட்கிழமையிலிருந்து நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
இதனை சவுதி அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தீவிரவாதத்துக்கு கத்தார் ஆதரவு அளிப்பதாக குற்றம் சாட்டி அந்த நாட்டுடனான தூதரக உறவை சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், எகிப்து ஆகிய நாடுகள் அண்மையில் துண்டித்தன.
இதன் காரணமாக கத்தார் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து சவுதி ஜூன் மாதம் இரண்டு வாரங்கள் கத்தார் உடனான நிலப்புற எல்லைப் பகுதியை மூடியது. இந்த நிலையில் தற்போது கத்தாருடனான நிலப்புற எல்லைப் பகுதியை சவுதி நிரந்தரமாக மூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Post a Comment