Ads (728x90)

‘யாழ்ப்­பா­ணத்­துக்கு நான் வருகை தந்­த­தற்­கான நோக்­கத்தை, பொறுப்பை நிறை­வேற்­றி­விட்­டேன். மட்­டக்­க­ளப்­புக்­குச் சென்று அங்­குள்ள மக்­க­ளுக்­குச் சேவை­யாற்ற விரும்­பு­கின்­றேன். அதற்­கான மாற்­றல் விரை­வில் எனக்கு வரும்.’இவ்­வாறு யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்ற நீதி­பதி மாணிக்­க­வா­ச­கர் இளஞ்­செ­ழி­யன் தெரி­வித்­தார்.

யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்­றில் நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்ற வரு­டாந்த விருந்­து­ப­சார நிகழ்வு மற்­றும் இட­மாற்­ற­லா­கும் உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்­கான மதிப்­ப­ளிப்பு நிக­ழ்வில் பங்­கேற்று உரை­யாற்­றும் போதே அவர் இத­னைத் தெரி­வித்­தார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:
நீதி­ப­தி­கள், சட்­டத்­த­ர­ணி­கள் மற்­றும் நீதி­மன்ற உத்­தி­யோ­கத்­தர்­கள் இணைந்த ஒன்றே நீதி­மன்­றக் குடும்­பம். இந்த மூன்று தரப்­பி­ன­ரி­ட­மும் ஒற்­றுமை அவ­சி­யம். அதுவே எனது சேவை­யின் குறிக்­கோ­ளா­கும். கிழக்கு மாகாண மக்­க­ளுக்­குச் சேவை­யாற்ற வேண்­டும் என்­பது எனது அவா.

 அதற்­காக நான் யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து விடை­பெ­றும் காலம் நெருங்­கி­விட்­டது. அந்த மாவட்ட மக்­க­ளுக்கு நான் சேவை­யாற்­ற­வேண்­டும்– -என்­றார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget