
ஐஎம்எப்.,ன் வில்லியம் முர்ரே, நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
இந்தியாவில் கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பாராட்டத் தகுந்த நன்மைகள் ஏற்பட்டுள்ளதை நாம் காண்கிறோம். இன்னும் பல நன்மைகள் இதனால் ஏற்படவும் சாத்தியமுள்ளது.
பணமதிப்பிழப்பு, துவக்கத்தில் பொருளாதார ரீதியாக சில தற்காலிக பிரச்னைகள் ஏற்பட்டது. சில்லறை மற்றும் பண பற்றாக்குறையால் தனியார் நிறுவனங்கள், சிறு தொழில்கள் சில இன்னல்களை எதிர்கொண்டன. ஆனால் அதனால் கிடைத்துள்ள பலன்கள், இன்னல்களை சிதறடித்து விட்டன.
நடப்பு ஆண்டின் துவக்கத்தில் சில பிரச்னைகளை ஏற்படுத்தினாலும், மத்தியில் நல்ல பலனை ஏற்படுத்த துவங்கியது. பொருளாதார செயல்பாடுகள், வங்கிகள் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனை முறையில் மிகப் பெரிய ஒழுங்குமுறையை இது ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மற்ற உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் வளர்ச்சி கவலை அளிப்பதாக உள்ளதாக ஜனவரி மாதத்தில் ஐஎம்எப் குறிப்பிட்டிருந்தது. தற்போது பணமதிப்பிழப்பால் இந்திய பொருளாதாரம் பலனடைந்துள்ளதாக பாராட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது
Post a Comment