Ads (728x90)

பூமியை போன்ற 8 புதிய கிரகங்களை, நாசாவின் கெப்ளர் ஸ்பேஸ் டெலஸ்கோப் மற்றும் அமெரிக்க விண்வெளி கழகத்தின் செயற்கை நுண்ணறிவு பிரிவு (Artificial Intelligence) ஆகியவற்றின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், நமது சூரிய குடும்பத்தை போன்று, ஒரு நட்சத்திரத்தை மையமாக கொண்டு சுற்றி வரும் பல கோள்கள் அடங்கிய மண்டலம் உள்ளது. ஏராளமான கோள்களை கொண்ட இந்த மண்டலத்தில் எதுவும் உயிரினங்கள் வாழ ஏற்றதாக இல்லை. இருப்பினும் இவற்றில் 8 கோள்கள் பூமியைப் போன்ற தோற்றம் கொண்டதாக உள்ளன.
இந்த கோள்களின் மையமாக விளங்கும் நட்சத்திரம் கெப்ளர் 90 என அழைக்கப்படுகிறது.

 இது 2545 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. கெப்ளர் 90 நட்சத்திர மண்டலம், மினி சூரிய குடும்பம் போன்றே காணப்படுகிறது. கோள்கள் ஒன்றுக்கு ஒன்று நெருக்கமாக காணப்படும் இந்த நட்சத்திர மண்டலத்தில் சிறிய அளவிலான கோள்கள் உள் பகுதியிலும், பெரிய கோள்கள் வெளி பகுதியிலும், நட்சத்திரத்தை சுற்றி வருகின்றன.

புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள கெப்ளர் 90ஐ என்ற கோள், பூமியை போன்றே இருந்தாலும், இது நட்சத்திரத்தை ஒருமுறை சுற்றி வர 14.4 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. இதன் பரப்பளவு மிகுந்த வெப்பம் நிறைந்ததாக இருக்கலாம். தோராயமாக 426 செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கலாம். செவ்வாய் கிரகத்தை விட இது வெப்பம் நிறைந்ததாக இருக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget