
ஜெருசலேமை இஸ்ரேலின் தலைவராக ட்ரம்ப் அறிவித்ததிலிருந்து பெரும்பாலான அரபு நாடுகளில் ட்ரம்புக்கு எதிராக போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் டிசம்பர் மாத இறுதியில் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸுக்கும், பாலஸ்தீன அதிபர் மம்மூத் அப்பாஸிக்கும் இடையே நடக்கவிருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படுகிறது என்று பாலஸ்தீனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பாலஸ்தீன ராணுவ அதிகாரி ஒருவர் கூறும்போது, "அமெரிக்க துணை அதிபர் பென்ஸை பாலஸ்தீன பிரதேசங்களில் நுழைய அனுமதிக்க மாட்டோம்” என்று கூறியுள்ளார்.
பேச்சு பேச்சுவார்த்தையை ரத்து செய்வது எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்று அமெரிக்கா தரப்பில் கூறப்பட்டுள்ளது
Post a Comment