
இது அருணாச்சல பிரதேச மாநிலம் தவாங் பகுதியில் சுமார் 6,500 கி.மீ., தூரத்தில் பறக்கவிடப்பட உள்ளது. இது தொடர்ந்து 3 வாரம் வானத்தில் பறந்தபடி இருக்கும் திறன் படைத்தது. இந்த ட்ரோனுக்கு பெயர் இன்னும் வைக்கப்படவில்லை. இந்த ட்ரோன் மூலம் திபெத்தில் சீனாவின் ராணுவ நடவடிக்கைகளை 24 மணி நேரமும் கண்காணிக்க முடியும்.
சீனாவை கண்காணிக்க செயற்கை கோள் பயன்பாட்டை குறைக்க முடியும். குறிப்பிட்ட பகுதிகளை தெளிவாக படம் பிடிக்க செயற்கை கோள் பயன்படுத்துவதற்கு அதிகளவு எரிபொருள் தேவைப்படுகிறது.
இந்தியாவில் தனியார் நிறுவனம் ஒன்று உருவாக்கிய முதல் ட்ரோன் இதுவாகும். இந்த ட்ரோனை போயிங் நிறுவனம் ஆய்வு செய்துள்ளது. இந்த ட்ரோன் 2019 முதல் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது
Post a Comment