
தேர்தல் கூட்டம் ஒன்றில் அவர் பேசியதாவது: மோடி வகிக்கும் பதவியை காங்கிரஸ் கட்சி எப்போதும் மதிக்கும். தவறான வார்த்தையை பயன்படுத்தி கட்சியினர் யாரும் மோடிக்கு எதிராக பேசக்கூடாது. இதனால் தான் மணிசங்கர் அய்யருக்கு எதிராக நடவடிக்கை எடுத்தோம். எங்களை பற்றி மோடி என்ன வேண்டுமானாலும் பேசட்டும்.
குஜராத் மக்களுக்காக பா.ஜ., என்ன செய்துள்ளது. அக்கட்சி தேர்தல் அறிக்கை தயாரிக்கவில்லை. மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்த 10 நாளில் விவசாயிகள் கடன் குறித்து அறிவிக்கப்படும். தேர்தலில் காங்கிரஸ் நிச்சயம் வெற்றி பெறும். இவ்வாறு ராகுல் பேசினார்
Post a Comment